பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளை கல்முனை அல் பஹ்றியா தேசிய பாடசாலை சாம்பியனாக தெரிவு தெரிவு





கல்முனை கல்வி வலயத்தின் முஸ்லிம் கோட்ட பாடசாலைகளுக்கான மெய்வல்லுனர் போட்டியில் நற்பிட்டிமுனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.


இவ் மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை, நற்பிட்டிமுனை,மருதமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 முஸ்லிம் பாடசாலைகள் பங்கு பற்றிய மெய்வல்லுனர் போட்டியில் ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டது.


இப்போட்டியில் பங்கு பற்றிய அல்-பஹ்றியா மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)மாணவ,மாணவிகள் 19 முதலாம் இடங்களையும் 17 இரண்டாம் இடங்களையும் 6 மூன்றாம் இடங்களையும் பெற்று கல்முனை முஸ்லிம் கோட்ட மெய்வல்லுனர் ‌‌‍‌சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.


இவ் வெற்றிக்காக மாணவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால்,பிரதிஅதிபர்கள்,
ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள்,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.


(எம்.என்.எம்.அப்ராஸ்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.