பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் எழுத்துப் பரீட்சை
பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படும் அல்லமா இக்பால் புலமைப்பரிசில் பெற தகுதியானவர்களை தெரிவுசெய்ய நடத்தப்படும் எழுத்துப்பரீட்சை புதன்கிழமை (29) மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் முனீரா பாலிஹா மஹா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், தொழிநுட்பம் போன்ற துறைகளில் கல்விபயில இதன் மூலம் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாவும் இதற்கான முழு செலவுகளும் பாகிஸ்தான் அரசினால் வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கையின் பல்லினங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கடந்த காலங்களில் பயன் பெற்றுள்ளனர் என பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு, குருநாகல், கண்டி போன்ற நகரங்களில் மட்டுமே இடம்பெற்றுவந்த இந்த தேர்வானது வழமைக்கு மாறாக கடந்த ஆண்டு முதல் கிழக்கில் பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைய உயரதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளினால் நேரடியாக நடத்தப்படுகிறது.
இந்த பரிட்சையில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 150 பேரளவில் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் பாகிஸ்தான் உயஸ்தானிகர் ஆலய உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
நூருள் ஹுதா உமர்.
Post a Comment