வன்னி மக்களின் நீண்டநாள் கனவு இன்று விசாரணைக்கு
மன்னார் மக்களின் புத்தளம் கொழும்பு பயணத்திற்கு இடப்பெயர்ச்சிக்கு முன்பு தொட்டு நீதிமன்ற தடை வரை பாவித்து வந்த ஒரு பாதைதான் இந்த எழுவான்குளம் மன்னர் பாதை தற்போது மன்னாரிலிருந்து புத்தளம் செல்லவேண்டும் என்றால் சுமார் 200 கிலோமீட்டர் பயணம் அனுராதபுர வீதியூடாக பயக்கும் நிலை உள்ளது ஆனால் மன்னார் எழுவான்குல வீதி வெறும் 120 கிலோமீட்டர்கள் மாத்திரமே இதானால் 80 கிலோமீட்டர் போக்குவரத்து தொலைவு இந்த பாதையினால் மட்டுப்படுத்தப்படுகின்றது நேரம் எரிபொருள் போன்றவையும் சேமிக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது வில்பத்து வனத்தினூடாக இந்த பாதை ஊடுருவி செல்வதை காரணம் காட்டி பாதை மூடப்பட்டுள்ளதும் இதே வில்பத்து ஊடக அனுராதபுரம் ஓயாமடுவை போன்ற பாதைகள் தற்போது பாவனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது இன்று புத்தளம் இலவன்குளம் மன்னார் மறிச்சிக்கட்டிப்பாதை கொழும்பு உயர்நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது சாதகமான முடிகள் வர இறைவனைப் பிராத்தித்துக் கொள்வோம்
Post a Comment