எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்.. வெளியான அறிவிப்பு


 எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்கள் ஆகியோர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. 

இதனால் அன்றைய தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்..! வெளியான அறிவிப்பு | March 15 School In Sri Lanka

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரச, தனியார் மற்றும் தனியார் உள்ளிட்ட தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு

8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், தனியார் ஆசிரியர்கள், துணைப் பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முடங்கும் பாடசாலைகள்..! வெளியான அறிவிப்பு | March 15 School In Sri Lanka

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் முடங்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.