முதல் விக்கெட்டை கைப்பற்றிய இலங்கை! நியூசிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் இலக்கு
கிறிஸ்ட்சர்ச் டெஸ்டில் நியூசிலாந்துக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்கை இலங்கை நிர்ணயித்துள்ளது.
ஏஞ்சலோ மேத்யூஸ் 115
இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் இன்று முடிந்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 302 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 115 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் தினேஷ் சண்டிமல் 42 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
285 ஓட்டங்கள் இலக்கு
அதன் பின்னர் 285 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது. 5 ஓட்டங்கள் எடுத்திருந்த தொடக்க கான்வேயை, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா Cot and Bold முறையில் வெளியேற்றினார்.
நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டாம் லாதம் 11 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 7 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
Post a Comment