யாழில் இரவு கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல்!

 யாழ்ப்பாணம் - வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச் சம்பவம் இன்றிரவு (16-03-2023) 8.30 மணியளவில் கோப்பாய் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

யாழில் இரவு கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல்! | Jaffna Regional Council Member Wife Sword Attack  

ஆலய திருவிழா கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பிரதேச சபை உறுப்பினரையும் அவரது மனைவியையும் பின்தொடர்ந்த மூவர் அவர்களின் வீட்டிற்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது பிரதேசசபை உறுப்பினரும் மனைவியும் நகைகளை அறுப்பதை தடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.  

இதையடுத்து அங்கு திரண்டவர்கள் இருவரையும் மீட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.