ரணிலின் சக்தியை மக்கள் சக்தி வென்றெடுக்கும்: அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சக்தியை மக்கள் சக்தி வெற்றி கொள்ளும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் உயிரிழந்தோர்
ஆட்சியாளர்களுக்கு எதிரான நியாயமான போராட்டங்களில் பங்கேற்ற எமது கட்சியின் சகோதரர் நிமல் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகப் போராட்டத்தில் பிரியந்த வன்னிநாயக்க என்பவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் போராட்டங்களில் பங்கேற்ற போதே உயிரிழந்துள்ளனர்.
இரசாயனத் தாக்குதல்
இரகசியமான முறையில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற வலுவான சந்தேகம் எமக்குள் காணப்படுகின்றது.
கலகத் தடுப்பு பிரிவினர் உலகில் தடைசெய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த வெறித்தனமான செயற்பாடுகளால்தேசிய மக்கள் சக்தியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ரணிலின் சக்தியைமக்கள் சக்தி வெற்றி கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment