இலங்கைக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி - இந்தியா வழங்கும் பில்லியன் டொலர்
இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க Doller கடன் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கடன் தொகையை இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு மீண்டும் உதவிக் கரம் நீட்டும் இந்தியா
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ஏற்கனவே பல பில்லியன் டொலர்களை இந்திய அரசாங்கம் கடனாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment