தொடருந்தில் குழந்தையை கைவிட்ட பெற்றோர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 கொழும்பு -  கோட்டை  தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்தின் கழிவறையில் கைக் குழந்தை ஒன்றை கைவிட்டுச் சென்ற குழந்தையின்  எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தாய் வழங்கிய வாக்குமூலம்

தொடருந்தில் குழந்தையை கைவிட்ட பெற்றோர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Infant Found Abandoned Inside Train Restroom

நேற்று முன்தினம் இரவு, கொழும்பு - கோட்டை தொடருந்து நிலையத்தில் மட்டக்களப்பு நோக்கி  பயணிப்பதற்கு தயாராக  நிறுது்தி வைக்கப்பட்டிருந்த  மீனகயா தொடருந்தில்  குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. 

அதன் பின்னர், குழந்தையை கைவிட்டுச் சென்ற 26 வயதுடைய தம்பதியர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். 


மேலும், குழந்தையை கண்டெடுப்பவர்கள் பாதுகாப்பாக குழந்தையை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் குழந்தையை கைவிட்டுச் சென்றதாக கைது செய்யப்பட்ட குழந்தையின் தாயார் பொலிஸாரிடத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.