உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு முக்கியமானது - இலங்கைக்கான அமெரிக்க தூதர்


 


வரும் உள்ளூராட்சித் தேர்தல் இலங்கைக்கு முக்கியமானது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (12) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடத்திய 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய தூதுவர் சங், அமெரிக்காவுடனான இலங்கையின் நீண்டகால உறவு, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து பேசினார்.

சுதந்திர நீதித்துறையின் அவசியம் குறித்து பேசிய அவர், உள்ளூராட்சி சபை தேர்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இது குடிமக்கள் அரசாங்கத்திடம் நேரடியாக வாதிடும் திறனைக் கொடுத்துள்ளது. என்று விளக்கினார்.

எனவேதான் உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என்று தாம் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுதந்திரமான தேர்தல்களின் பெருமைமிக்க வரலாறு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து பேசிய தூதுவர், சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலையில் எந்த ஜனநாயகமும் நிலைத்து நிற்காது என்றும் தெரிவித்தார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.