மகிந்தவைப் பிரதமராக்கும் திட்டம் இல்லை - ரணில் தெரிவிப்பு

 இந்த அரசாங்கத்தில் மீண்டும் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்கும் எண்ணம் மகிந்த ராஜபக்சவுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் அழுத்தம் கொடுப்பதாக தென்னிலங்கை ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். 

பிரதமருக்கு அழுத்தம் இல்லை

மகிந்தவைப் பிரதமராக்கும் திட்டம் இல்லை - ரணில் தெரிவிப்பு | Prime Minister Srilanka Mahinda Rajapaksa

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு முழு ஆதரவை வழங்குகின்றது.

மற்றும் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு ராஜபக்ச தரப்பிலிருந்து எந்த அழுத்தமும் இல்லை.

பொதுஜன பெரமுனவின் நம்பிக்கையை வென்ற சிறந்த அரசியல்வாதி என்றபடியால் தான் தினேஷ் குணவர்த்தனவை இந்த அரசாங்கம் பிரதமராக நியமித்தது

இருப்பினும் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்கவுள்ளார் என்பது ஒரு வதந்தி என்று நான் நினைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.