தொழிற்சங்கப் போராட்டத்தினால் நான்கு பில்லியன் ரூபா நட்டம்!

 தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துறைமுகம், ரயில்வே, தபால், இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட அரசாங்க நிறுவனங்கள் பலவற்றில் நேற்றைய தினம்பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் நாட்டுக்கு நான்கு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.




சாதாரணமாக நாள் ஒன்றில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 10 பில்லியன் ரூபா எனத் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக ஏற்பட்ட நட்டத்தை துல்லியமாக மதிப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பல்வேறு அரசாங்க நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததாக குறித்த அதிகாரி தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.