தேர்தல்கள் ஆணைக்குழு இன்றும் கூடுகிறது
தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (16) காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சு அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குத் தேவையான தொகையை ஒதுக்குமாறு மீண்டும் திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அரசு அச்சகம் தெரிவித்துள்ளது
Post a Comment