இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் இரண்டு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பிரதேசங்களின் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment