பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை! நீங்கள் ஏமாற்றப்படலாம்
பொலிஸார் போன்று வேடமணிந்து கொள்ளையடிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை அச்சுறுத்தி 90 கைத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை அபகரித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்கள் கொள்ளையிட்ட பொருட்களை பல இடங்களில் மக்களுக்கு விற்பனை செய்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரு சந்தேகநபர்களும், மோட்டார் சைக்கிளில் சென்று பல்வேறு நபர்களை சோதனையிட்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட உடமைகளை திருடிச் செல்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அவர்கள் கொள்ளையடித்த 37 ஆப்பிள் ஐபோன் ரக தொலைபேசிகள், 44 ஸ்மார்ட் ரக தொலைபேசிகள், 5 மடிக்கணினிகள், 2 டேப் கணினிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
Post a Comment