தனது சட்டத்தரணியுடன் பிரேரணை விண்ணப்பம் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் விமல் வீரவன்ச
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று -14- மீளப்பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நேற்று (13) பிடியாணை பிறப்பித்திருந்தார் . பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச தனது சட்டத்தரணியுடன் பிரேரணை விண்ணப்பம் மூலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
சுகயீனம் காரணமாக அவறால் நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு பௌத்தலோக மாவத்தையில் பிரதான வீதிகளை மறித்து மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய போராட்டத்திற்கு விமல் வீரவன்ச மற்றும் ஐவர் தலைமை தாங்கியதாக கறுவாத்தோட்ட பொலிஸார் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment