அச்சிடும் நடவடிக்கைகளுக்காக நிதி வழங்கக் கோரி திறைசேரிக்கு கடிதம்

 தேர்தலுக்கான அச்சிடும் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை வழங்கக்கோரி திறைசேரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பான கடிதம் திறைசேரியின் செயற்பாட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.


குறித்த கடிதத்தின் நகலை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.



அச்சகப் பணிகளுக்கு பணம் கேட்டு முன்னதாக நிதியமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்துக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அரச அச்சகர் மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.