இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு
வெளிநாட்டில் கைதான பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
மடகஸ்கரில் வைத்து நதுன் சின்தக்க எனப்படும் ஹரக் கட்டா மற்றும் சலிந்து மல்சிக்க எனப்படும் குடு சலிந்து ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அண்மையில் மடகஸ்கருக்கு சென்றிருந்தனர்.
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்துவுடன் மேலும் ஆறு பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஒரு வெளிநாட்டு பெண்ணும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment