கோட்டாபய பயன்படுத்திய சொகுசு வாகனம் நடிகை பியூமியிடம்! வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய சொகுசு வாகனமொன்றை, தான் கொள்வனவு செய்துள்ளதாக பிரபல நடிகை பியூமி ஹன்சமாலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய வாகனத்தையா நீங்கள் வாங்கியுள்ளீர்கள் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்
உறுதிப்படுத்திய நடிகை
ஆம், கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய வாகனத்தை தான் வாங்கியுள்ளேன் என கூறி குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அந்த வாகனம் கோட்டாபய பயன்படுத்திய வாகனமா என அவர் தரப்பிலிருந்து எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment