வேலை நிறுத்தம் செய்வோரின் சொத்துக்கள் பறிமுதல்! வேலையும் பறிபோகும் - கடும் எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து வேலைநிறுத்தங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளது அசையும் அல்லது அசையா சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என்றும், அந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் நடத்தப்படும் விசாரணையின் பின் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்களுக்கு இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இந்தக் குற்றத்தை செய்பவர் பணிபுரியும் உரிமையை இழக்க நேரிடும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Post a Comment