கிராம அளவில் எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயம்


கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதால், மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் ஜனவரி முதல் இந்த வருடம் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் எரிபொருள் விற்பனை 30 முதல் 70 வீதத்திற்கு இடையில் குறைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில், மண்ணெண்ணெய் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. அந்த சதவீதம் 70 சதவீதம். லங்கா ஒட்டோ டீசல் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோல் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது.எரிபொருள் விற்பனை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.