இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அண்ணாமலை வெளியிட்ட தகவல்!


 பணிபுரியும் தமிழர்களுக்கு வீடமைத்து கொடுப்பதால் அவர்களின் வாழ்க்கைத்தரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படும் என பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டரில் பதிவில்,

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் இருந்து, சுமார் 200 வருடங்கள் முன்பு இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா 28 லட்ச ரூபா மதிப்பில், 4000 வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களிடையே அண்மையில் கைச்சாத்தானது.

இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக, பிரதமர் மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில், இது ஒரு மைல்கல் ஆகும்” என பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.