ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு! டொலரின் கையிருப்பும் அதிகரித்துள்ளது

 அரசாங்கத்தின் காத்திரமான செயற்பாடுகளே ரூபாவின் பெறுமதி அதிகரிக்க காரணமாகியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற  விவாதத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது தவணை நிதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நாட்டுக்குக் கிடைக்குமென்றும் அவர் சபையில் நம்பிக்கை வெளியிட்டார்.

அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு! டொலரின் கையிருப்பும் அதிகரித்துள்ளது | Sri Lanka Rupee Increase

வீழ்ச்சியுற்றுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சட்டபூர்வமாக அரசாங்கத்துக்கு வரிகளை வழங்கி மேற்கொள்ளப்படும் மதுபான விற்பனையை உறுதிப்படுத்துவதற்காக, அரசாங்கத்தினால் ஸ்டிக்கர் முறையொன்று கடந்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த பத்து மாதங்களின் பின்னர் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது காத்திரமான வேலைத் திட்டங்களே இதற்கு காரணமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அதன் மூலம் 436 மில்லியன் டொலர் நாட்டுக்கு இந்த வருடத்தில் கிடைத்துள்ளது.

அத்துடன் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்களை எதிர்க்கட்சிகள் தாராளமாக முன்வைக்கலாம்.

நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.