அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கொந்தளிப்பு

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவது என்பது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலின் மூலம் மக்களின் இறையாண்மையை உறுதி செய்வதே நடைமுறையாகும் என இலங்கை அரச தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கொந்தளிப்பு! | Sri Lankan Local Elections 2023

மக்கள் நலக் கொள்கைகள்அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாட்டின் சட்டக் கட்டுப்பாடுகளுக்குள் மக்கள் பேச்சு சுதந்திரம் பெற வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்து, வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இயல்புநிலையையும் அமைதியையும் மீட்டெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனத் தேரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி, மக்கள் நலக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அனைத்து தரப்புகளும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாக மகாநாயகர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.