அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும்!விடுக்கப்பட்டுள்ள கால அவகாசம்

 2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு பல தடவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும்!விடுக்கப்பட்டுள்ள கால அவகாசம் | Audited Report For The Year 2021

அரசியல் கட்சிகள்

இதுவரை 2021 ஆம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் இன்று முதல் 14 நாட்களுக்குள் அதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (23) கலந்துரையாடல் ஒன்றை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.