இலங்கையர் ஒருவருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு
இலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸாரினால் லலித் கன்னங்கர என்பவருக்கு எதிராகவே இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு மனித படுகொலைகளை குறித்த நபர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிடிவிராந்து உத்தரவு
ஹங்வெல்ல உணவு விடுதி உரிமையாளர் படுகொலையையும் இந்த நபர் டுபாயிலிருந்து வழிநடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்த்தகரை படுகொலை செய்த பூரு முனா எனப்படும் ரவிந்து வர்ண ரங்கன என்ற நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
எனினும் விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் தப்பிச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment