இலங்கையின் இயல்பு நிலை பாதிப்பு - களமிறங்கிய இராணுவத்தினர்

 இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 10 அலுவலக ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோரப் பாதையில் நான்கு ரயில்களும் புத்தளம், களனி மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு ரயில்களும் கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இயல்பு நிலை பாதிப்பு - களமிறங்கிய இராணுவத்தினர் | Damage To Normality In Sri Lanka

இவ்வாறு இயங்கிய சில புகையிரதங்களுக்கு இராணுவப் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இன்று காலை நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் ரயில் ஊழியர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக இன்று காலை 8.00 மணிவரை 20 ரயில்கள் பயணிகளின் வசதிக்காக இயங்கியுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.