உக்ரைனுக்கு வந்து குவியும் போர் விமானங்கள்! ஆதரவளிக்கும் நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் ரஷ்யா






 உக்ரைனுக்கு 13 MIG-29 போர் விமானங்களை அனுப்ப ஸ்லோவாக் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என பிரதமர் எட்வார்ட் ஹெகர் (Eduard Heger) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு நாடகளும் உறுதியளித்ததை அடுத்து, உக்ரைனுக்கு அதன் நட்பு நாடுகளால் வழங்கப்படும் போர் விமானங்களை அழித்துவிடுவோம் என்று ரஸ்யா  மிரட்டியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி வருகிறது.

கடந்த 16-ஆம் திகதி போலந்து அரசு சில போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்கியது. இதனை தொடர்ந்து ஸ்லோவாக்கியா (Slovakia) நாடு MIG-29 ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது.

MiG-29 விமானங்கள்

ஸ்லோவாக்கிய நாட்டில் MiG-29 விமானங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. மேலும் அவற்றில் பெரும்பாலானவை செயல்பாட்டு நிலையில் இல்லை. இதில் செயல்பாட்டிலுள்ள விமானங்களை மட்டும் அந்நாட்டு அரசு உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. மீதமுள்ள விமானங்கள் உதிரிப் பாகங்களுக்கு செல்லும் என தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனைஆக்கிரமித்ததிலிருந்து, முன்னாள் கம்யூனிஸ்ட் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளான போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் போரில் உக்ரைனுக்கு ஆதரவாளர்களாக செயல்பட்டு வருகிறது.

இராணுவ போர் விமானங்கள் 

போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரண்டு நாடுகளும் தங்கள் விமானங்களை உக்ரைனுக்கு ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

ஆனால் இந்த உதவியை அந்நாடுகள் சர்வதேச கூட்டணியின் ஒரு பகுதியாக மட்டுமே செய்கிறது. மற்ற நாடுகளும் தங்கள் இராணுவ விமானங்களைப் பகிர்ந்து கொள்ளுமா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.

வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின்(NATO) உறுப்பினர் அல்லாத உக்ரைனுக்கு இராணுவ போர் விமானங்களை வழங்கலாமா என்ற விவாதம் கடந்த ஆண்டு தொடங்கியது, ஆனால் NATO அமைப்பிலுள்ள நாடுகள் போரில் கூட்டணியின் பங்கை அதிகரிப்பது குறித்த கவலையை காரணம் காட்டி மறுத்துள்ளனர்.         

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.