யாழ்.சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவை


 யாழ்.சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமானசேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் என யாழ்  இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும்  மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

சர்வதேச விமானம் நிலையம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர்.

இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருகின்றோம்.

மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

மேலும் யாழ்ப்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.