தேர்தலை நடத்த முடியாது – PAFRAL





 ஏப்ரல் 25ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலைமைக்கு நாடு வந்துள்ளதாக நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் தேர்தலுக்குத் தேவையான பணத்தைத் தடுப்பது முதன்மையான நடவடிக்கையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் மூலம் முழுத் தேர்தல் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் தேர்தல்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்டோருக்கு ஏற்ற விதத்திலேயே நடத்தப்படுகின்றன என ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்திருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.