அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­ சட்­டத்­தையும் விட மிகவும் மோச­மான சட்­டங்­களை கொண்டுவர முனைகிறார்கள் - PTA வை முதலில் இல்லாமலாக்குங்கள் - ஜனாதிபதி சட்டத்தரணி MM சுஹைர்


 புதிய பெயர்­களில் மேலும் கொடூ­ர­மான சட்­டங்­களை இயற்­று­வதை விடுத்து, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக இரத்துச் செய்­யு­மாறு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,


சட்­ட­வி­ரோத பணப்­ப­ரி­மாற்ற தடுப்புச் சட்டம், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­யு­தவி செய்­வதை தடுப்­ப­தற்­கான சம­வாயம் போன்ற பல புதிய சட்­டங்­களும் சக்­தி­வாய்ந்த புல­னாய்வு வழி­மு­றை­களும் ஏற்­க­னவே அமுலில் உள்ள நிலையில், புதிய பெயர்­களில் மேலும் கொடூ­ர­மான சட்­டங்­களை இயற்ற முயற்­சிப்­ப­தாக நாம் அறி­கிறோம்.


இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பிற சட்டப் பாது­காப்­பு­களை மீறு­வ­தா­னது ஒரு பொது­வான நிகழ்­வா­கி­விட்­டது. எனினும் பெரும்­பா­லான பொது­மக்கள் உச்ச நீதி­மன்­றத்தை நாடி அடிப்­படை உரி­மை­களை பாது­காப்­ப­தற்­கான வாய்ப்­பு­களை கொண்­டி­ருக்­க­வில்லை.


பிர­பல்யம் வாய்ந்த வழக்­கு­களைத் தவிர, ஏனைய வழக்­கு­களில் நீதியைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு மனித உரிமை ஆணைக்­கு­ழுக்கள் தவ­றி­விட்­டன. வழக்குச் செல­வு­களை விட முறைப்­பா­ட­ளிப்­ப­தற்குப் பயந்து எவ்­வாறு மக்கள் அமை­தி­யா­கி­வி­டு­கின்­றனர் என்­பதை ஓர் ஆணைக்­கு­ழுவை நிய­மிப்­பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


2018 ஆம் ஆண்டில் அப்­போ­தைய அர­சாங்கம் ஒரு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டத்தை இயற்ற முயன்ற போதிலும் பலத்த எதிர்ப்பு கார­ண­மாக அது கைவி­டப்­பட்­டது. எனினும் தற்­போது அமு­லி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­தையும் விட மிகவும் மோச­மான சட்­டங்­களை கொண்டு வரு­வ­தற்­கான நகர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்கு அனு­ம­திக்க முடி­யாது. என­வேதான் மேலும் புதிய சட்டங்களை இயற்றுவதை விடுத்து, தற்போதுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாதொழிக்கின்ற நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.