1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்போது அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களை பதுக்கி வைத்தமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 1500 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்கின்றமை, அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றமை உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

விசேட சுற்றிவளைப்புகளுக்காக மேலதிக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், விடுமுறை தினங்களிலும் இரவு நேரங்களிலும் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.