எரிபொருள் விற்பனை அதிகரிப்பு


 கடந்த வாரத்தில் தேசிய எரிபொருளின் விற்பனை மற்றும் QR குறியீடு மூலம் எரிபொருளை வழங்குவதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 60% க்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80% க்கு மேல் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர QR வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத 66 எரிபொருள் நிலையங்களை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து, இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பண்டிகை கால எரிபொருள் தேவைக்கு ஏற்ப, அடுத்த சில நாட்களுக்கு நாளாந்த எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 4,650 மெற்றிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 5,500 மெற்றிக் தொன் ஆட்டோ டீசல் நாளாந்தம் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.