ஐக்கிய மக்கள் சக்தியை உடைப்பது எமது நோக்கம் அல்ல: வஜிர அபேவர்த்தன


 பிரதான எதிர்க்கட்சிகள் இனியும் தலைதூக்கும் நிலைமை வராது, எல்லோரும் ஒன்றிணைந்து தேசிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "ஆசியாவின் முன்னேற்றமடைந்த நாடாக இலங்கை மாற வேண்டும் என்றால் எல்லோரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேசியுள்ளார்கள். என்னுடனும் பேசியுள்ளார்கள்.

தேசிய இணக்கப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தியை உடைத்து எடுப்பதல்ல இதன் நோக்கம். தேசிய இணக்கப்பாடுதான் எமது குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.