இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் இல்லை


 இலங்கையில் அமெரிக்க இராணுவ தளத்தை அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.

நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலில் அமெரிக்காவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் இலங்கை விஜயம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் நான் பல தடவைகள் கூறியுள்ளேன்.. இராணுவ முகாம் அமைக்கும் எண்ணம் எமக்கு இல்லை.

SOFA ஒப்பந்தத்தை புதுப்பிக்கவோ அல்லது மறுபரிசீலனை செய்யவோ அமெரிக்காவுக்கு எந்த எண்ணமும் இல்லை..” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.