கொழும்பில் இரகசியச் சந்திப்புக்களில் ஈடுபடும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்

 அரசாங்கத்தில் இணைவதற்கு முடிவெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் கொழும்பில் 5 தடவைகள் இரகசிய சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் பல விடயங்கள் இந்தச் சந்திப்புக்களின்போது பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறுதியாக நடைபெற்ற சந்திப்பில் அனைவரும் ஒரே தடவையில் குழுவாகச் சென்று அரசாங்கத்துடன் இணைவதா அல்லது கட்டம் கட்டமாக இணைவதா என்பது தொடர்பில் முக்கியமாகப் பேசப்பட்டுள்ளது.

ரணில் அரசாங்கம்

சகலரும் ஒரே தடவையில் அரசாங்கத்துடன் இணைந்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிரேமதாச மாத்திரமே மிஞ்சுவார் என்று இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.