சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியா ஆதரவு


 சூடானில் இடம்பெற்றுவரும் மோதலில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்த சில நாட்களில் சூடானில் இருந்து இலங்கையர்களை திரும்பப் பெறுவதாக நம்புவதாகவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சூடானில் உள்ள இலங்கையர்களின் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவை தாம் பாராட்டுவதாகவும், அடுத்த சில நாட்களில் அதை வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்று நம்பிக்கை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.