மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்...! பந்துல குணவர்த்தன கேள்வி


 அறிவிக்கப்படாத ஜனாதிபதித் தேர்தல் குறித்து சிலர் அவசரப்பட்டு கருத்து வெளியிட்டு வருகின்றனர் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை.

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் சிலர் தமது சொந்தக் கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் 

அந்தக் கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவர்கள் தமது சொந்தக் கருத்துக்களை தமது தனிப்பட்ட நிலைப்பாடுகளையே வெளியிட்டு வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் மொட்டுக் கட்சி ஒன்றுகூடி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கும். வெற்றிபெறக்கூடிய சிறந்த வேட்பாளரே களமிறங்குவார். அவர் யார் என்று இப்போது தெரியாது என தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.