சமூக ஆர்வலராக காட்டிக் கொள்ளும் அருண் சித்தார்த்தனுக்கு விளக்கமறியல்!


 யாழ்ப்பாணத்தில் சமூக ஆர்வலராக காட்டிக்கொண்டு, பல் தில்லாலங்கடி வேலையில் ஈடுபடும் அருண் சித்தார்த்தன் உள்ளிட்ட ஐந்து பேரை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி , சொத்துக்களை அழித்தமை மற்றும் உரிமையாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அருண் சித்தார்த்தனுடன் ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் , சிறிய குழந்தைகள் உள்ள பெண்கள் என்பதால், அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன், மற்ற ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

“ஆவா கும்பல்” தலைவர்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் “ஆவா கும்பல்” தலைவர் தானே என அருண் சித்தார்த்தன் , தென்னிலங்கை ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதோடு, தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தில் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அருள் சித்தார்த்தன் பணம் பெறும் அரசியல் கட்சிகள் தவிர்த்து, யாழ்ப்பாண அரசியல் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் , அவர்களின் அரசியல் மேடைகள் மற்றும் அலுவலகங்களை அழித்ததாகவும், கூட்டங்கள் நடக்கும் போது தாக்குதல்களை நடத்தியதாகவும் அருண் சித்தார்த்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.