ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்


 உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு சட்டமூலம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து, ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க பயங்கரவாதத்திற்கான பொருட்கோடலை பயன்படுத்துவது, உண்மைத்தன்மை மற்றும் சட்டபூர்வத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் எதேச்சையான முறையில் சுதந்திரம் பறிக்கப்படுவதை தடுத்தல் மற்றும் தடை செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 விடயங்கள் குறித்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சித்திரவதைகள் மற்றும் காணாமலாக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்தல், நீதியான வழக்கு விசாரணையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டமூலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களுக்கு முழுமையாக பொருந்தவில்லை எனவும் ஐக்கிய நாடுகளின் 10 விசேட அறிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.