எரியும் பாகிஸ்தான் – போராட்டத்தின் போது ஒருவர் பலி, 6 பேர் காயம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து, பாகிஸ்தானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இஸ்லாமாபாத் மட்டுமின்றி, ராவல்பிண்டி, லாகூர், கராச்சி, குஜ்ரன்வாலா, பைசலாபாத், முல்தான், பெஷாவர், மர்தான் ஆகிய இடங்களிலும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இம்ரான் கானின் ஆதரவாளர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதையடுத்து, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பேரணிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர் மற்றும் பொலிசார் மீது கற்களை வீசினர்.
பொலிஸ் உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள இராணுவ தலைமையகத்துக்குள்ளும், லாகூரில் உள்ள இராணுவ தளபதியின் வீட்டுக்குள்ளும் நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
70 வயதான இம்ரான் கான் நேற்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நுழைந்தபோது கைது செய்யப்பட்டார்.
Post a Comment