மூன்று நாட்களில் 700 டெங்கு நோயாளர்கள்
இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் லஹிரு கொடித்துவக்கு.
மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் சுமார் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போது கம்பஹா மாவட்டம் டெங்கு நோயினால் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் டெங்கு அபாய நிலை காணப்படுகின்றது.
Post a Comment