வெசாக் பண்டிகையை முன்னிட்டு 988 கைதிகள் விடுதலை
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 06 பெண் கைதிகள் உட்பட 988 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
இது தவிர, போஹோ தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களை பார்வையிட சிறைக்கைதிகளுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடுவதற்கு கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு நாட்களிலும் கைதிகளின் உறவினர்கள் ஒருவருக்கு மட்டும் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்கள் மற்றும் இனிப்புகளை வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment