எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு குறித்து அரசுக்கு நம்பிக்கையில்லை
எக்ஸ்பிரஸ் பேர்ல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கு நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கில் தோற்றால் அதற்கு சபாநாயகரும் எதிர்க்கட்சியும் தான் பொறுப்பு என ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் கூறியதாகவும் அவ்வாறு கூறுவது தவறு எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நம்பிக்கை இல்லை என்றும், இந்த வழக்கு கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது என்றும், தற்போது சாக்குப்போக்கு தேடுகின்றனர் என்றும் அவர் கூறினார்
Post a Comment