சர்ச்சைக்குரிய யாழ்.தையிட்டி விகாரை விவகாரம்! ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து, அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை தொடர்ந்து நேற்று(04.05.2023) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



தையிட்டியில் அத்துமீறல்கள்

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தையிட்டி விகாரை,அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த பகுதிகளில் சிறிய விகாரைகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் அந்த பகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டிருப்பதையும் சில இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே, தையிட்டி விகாரை தொடர்பாக சில தரப்புக்களினால் தற்போது பேசப்படுகிறது.

ஜனாதிபதியின் கவனத்திற்கு

இதற்கான அடிக்கல் 2018 ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவால் நாட்டப்பட்டது.

விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரிடம் கோரியிருக்கின்றேன்.

அவற்றை ஆராய்வதுடன், விரைவில் ஜனாதிபதிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பிலும் பிரஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன்.

வெடுக்குநாறி விவகாரத்தினை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தது போன்று இந்த விடயங்களும் ஜனாதிபதி சரியான முறையில் தீர்த்து வைப்பார்.” என தெரிவித்துள்ளார்.  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.