தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உண்டு” – பௌசி
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கிய போதிலும், தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். பௌசி நேற்று தெரிவித்துள்ளார்.
தாம் வெளியிடும் அறிக்கைகளின் அடிப்படையில் கட்சிக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் என ஊடகங்களில் இருந்து தான் அறிந்ததாகவும் ஆனால் இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment