சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி : பதிரனா அபார பந்து வீச்சு
மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தானத்தில் நேற்றையதினம் (06.05.2023) நடைபெற்ற இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
பதீரனா அபார பந்து வீச்சு
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அறிமுக வீரர் நேஹால் வதேரா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 64 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி சார்பில் பதீரனா 3 விக்கெட்டுக்களையும், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
சென்னை அணியின் 6 ஆவது வெற்றி
140 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் அதிரடியாக 16 பந்தில் 2 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 30 ஓட்டங்களை குவித்தார்.
இதேவேளை டெவோன் கான்வே 42 பந்துகளில் 44 ஓட்டங்களையும், சிவம் துபே ஆட்டமிழக்காமல் 18 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணி தனது 6 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
Post a Comment