விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தில்..

 

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டதாரர்கள் நிராகரிக்கின்றனர்.

விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணித் தலைவராக இருந்த தானிஷ் அலி குறிப்பிடுகின்றார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

.. விமலா என்பது எங்களுக்கு ஒரு ஜோகர்.. கோட்டா போவதற்கு முன்னர் நாம் பாய்ந்து விட வேண்டும் என்று மெல்லமாய் பாய்ந்தவர்  விமல். அசிங்கமான அமெரிக்கர் என்று ஒரு கதையை பசிலுக்கு பரப்பியவர் விமல் தான்.. மீண்டும் இன்னொரு சுற்றில் அமெரிக்க தூதுவர் கதையினை அளக்கிறார்.. விமல் அவரது புத்தக வெளியீட்டுக்கு சீனாவின் முன்னாள் தூதுவர் ஹு வை பக்கத்தில் அமர்த்தியுள்ளார்.. எல்லா உத்தர லங்கா சபையின் கூட்டங்களுக்கும் ஹூ கட்டாயம் வருவாரு, இனி விமலுக்கு ஹூ தான்..” எனத் தெரிவித்திருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.