மஹிந்தவை பிரதமராக்க மனோ விருப்பமாம்


 மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது பிரச்சினை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பதவிகளுக்கான நியமனங்கள் எவ்வாறாயினும், பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

“..நாட்டில் இந்நாட்களில் கதைக்கப்படும் பெரிய புராணம் தான் மஹிந்த ராஜபக்ஷ தனக்கு பிரதமர் பதவியை கோருகின்றமை. அதும் எமது ஜனாதிபதியிடம் கோருகிறாராம். நாமும் சொல்கிறோம், தயவு செய்து அதனை முதலில் செய்யுங்கள். அதில் எமக்கு பிரச்சினைகள் இல்லை. நாம் ஆட்சிக்கு வருவோம். மக்கள் ஆணை யாருக்குள்ளது என நாடே அறிந்து கொள்ளட்டும்..” எனத் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.