இலங்கை அரசியலில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்: கட்சி தாவும் எம்.பிக்கள்

 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அரசுடன் இணையப் போகின்றார்கள் என்று தொடர்ச்சியாகக் கூறப்பாடலும்கூட ஸ்ரீலங்காபொதுஜன பெரமுனவின் பக்கம் இருந்து 15 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு இணையவுள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அண்மையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


கொழும்பு - 07 இல் உள்ள இரு தரப்புக்கும் நன்கு பரிச்சயமான ஒருவரின் இல்லத்தில்தான் அந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. விரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அதனையொட்டி அரசுக்குள் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்றும் அந்த நால்வரும் சஜித்திடம் கூறியுள்ளனர்.

15 பேரும் நேராக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையப் போகிறீர்களா அல்லது கூட்டணியாக இணையப் போகிறீர்களா என்று 15 பேரும் கூடிப் பேசி ஒரு முடிவை எடுங்கள் என்று அவர்களிடம் சஜித் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு இரவு விருந்துடன் நிறைவு பெற்றது. அடுத்த சந்திப்புக்கான திகதியும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது என்றும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.